மௌனமாக வைக்கப்பட்ட என் நெஞ்சம் இருந்தது…
ஒரு ஒரு வரியும் என் புலம்பல்தான்
ஆனால் யாருக்கும் தெரியாத மொழியில் எழுதப்பட்டிருந்தது.
தலைப்பில்லா சில கவிதைகள்,
அத்தாள்கள் தான் என் தோள்களில் உறங்கிய இரவுகள்…
இப்போது அந்த கவிதைத்திரட்டு என்னிடம் இல்லை.
ஒளிந்திருக்கலாம்,
யாரோ திறந்திருக்கலாம்,
பகிர்ந்திருக்கலாம்... புரியாமல்.
அக்கவிதைகள், ஒரு மனிதனின் உள்ளம் உடைந்த பிம்பங்கள்.
ஒரு பெண்ணின் பெயர் கூட எழுதாத அத்தாள்களை,
இப்போது யார் கைகள் மெதுவாக கிழிக்கிறதோ(?)
மறக்க முடியவில்லை.
ஏனெனில், அவை தொலைந்த என் வரிகள் அல்ல, என் சிதறிய வலிகள்...
என் வாழ்வின் உடைந்த நொடிகள்.
தொலைத்து விட்டேன்.
இன்று நான் எழுதும் ஒவ்வொரு வரிக்கும்
அந்த பிழை ஒரு பிளவாகவே நிற்கிறது.
No comments:
Post a Comment